மதுரை மாவட்டம் யானை மலை ஒத்தக்கடையில், 11,500 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் 500 புதிய சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 6000 மகளிருக்கு கடன் வழங்கும் அரசு நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 9) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது,
“அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தந்திருக்கும் அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருக்கக்கூடியவரும், வருங்கால தமிழகத்தை வழிநடத்தக்கூடியவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.
ஏதோ ஆட்சிக்கு வந்தோம் திட்டங்களை அறிவித்தோம் என்றில்லாமல் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.
அவர் வழியை பின்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை கட்சி வேறுபாடுகள் இல்லாமல் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி வருகிறார். இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் தமிழ்நாடு தான் முன்மாதிரி மாநிலமாக செயல்படுகிறது.
தகுதி உள்ள விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகையை பெற்று தருவதற்கு அமைச்சர் உதயநிதி ஆவண செய்ய வேண்டும். 22 மாநகராட்சிகளிலும், புதிதாக மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் நத்தம், புறம்போக்கு இடங்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களுக்கு விதிவிலக்கப்பட்ட பட்டா வழங்குவதற்கு உதவிட வேண்டும் என்று மதுரை மாநகர மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்” : ஜெயம் ரவி
விஜயகாந்துக்கு பண்ருட்டி… விஜய்க்கு செஞ்சியா? பதிலளித்த செஞ்சி ராமச்சந்திரன்