திண்டுக்கல் மேற்கு ரதவீதியிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 23) ஆய்வு மேற்கொண்டார்
அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் சென்றார்.

அவருக்கு அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் கொடைரோடு டோல்கேட் மற்றும் தோமையார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
திண்டுக்கல் நகர்மன்ற தலைவர் மறைந்த ம.பசீர்அகமது அவர்களின் பேகம்பூர் இல்லத்தில் அவரின் திருவுருவப்படத்தை திறந்துவைத்து மரியாதை செய்தார்.
இன்று காலை திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு குழந்தைகளுக்கு அவர் காலை சிற்றுண்டி பரிமாறினார். பின்பு பள்ளியில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகளுக்குச் சென்று சுகாதாரமாக உள்ளதா என்று ஆய்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளிடம் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து வேடசந்தூர் ஆத்துமேடு மற்றும் சாலையூர் நால்ரோட்டில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.
இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பளவில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா, இயக்குநர் சுசீந்திரன் தாயார் நினைவு மண்டபத்திற்கு அஞ்சலி செலுத்துதல், கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
செல்வம்
“ஹெல்மெட் அணியாத போலீசார் மீது கடும் நடவடிக்கை” – டிஜிபி எச்சரிக்கை!
அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை