குடலிறக்க பிரச்சனை காரணமாக (இரணியா) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நீண்ட நாட்களாக குடலிறக்க பிரச்சனையால் (இரணியா) அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், கோவை ஜெம் மருத்துவமனையில் அமைச்சர் மதிவேந்தன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் அவர் தங்கியுள்ளார்.
தற்போது அறுவை சிகிச்சை செய்வதற்காக அமைச்சர் மதிவேந்தன் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடி வழக்கு : ஜெயக்குமார் மனு தள்ளுபடி!
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!