அமைச்சர் மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு!

Published On:

| By Kavi

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரண வழக்கில் திண்டிவனத்தைச் சேர்ந்த ஹோல்சேல் சாராய வியாபாரி மரூர் ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்தது.

கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான முத்து தனது வாக்குமூலத்தில், “மரூர் ராஜா ஹோல்சேல் வியாபாரி. திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் மஸ்தானைப் பார்த்து திமுகவுல சேர்ந்துட்டார்.

மந்திரி மஸ்தானின் மகன், மாப்பிள்ளையோடு நெருக்கமாகிட்டாரு. சாராயத் தொழிலையும் விரிவுபடுத்தினார். மரூர் ராஜா சரக்கு வண்டின்னாலே போலீஸ் ஒதுங்கி வழி விடும்’ என்று சொன்னதாக போலீசார் கூறினர்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் கள்ளச்சாராய குற்றவாளியுடன் அமைச்சர் மஸ்தான்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமைச்சரின் மகன், மாப்பிள்ளை, தம்பி என குடும்ப உறுப்பினர்களே கட்சி பொறுப்புகளில் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

இந்தச்சூழலில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூர் செயலாளராக இருந்த அமைச்சர் மஸ்தானின் தம்பி காஜாநஜீரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது,
அவருக்குப் பதிலாக கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சரின் பேர் அடிப்பட்ட நிலையில் அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் திமுகவினர் கூறுகின்றனர்.

பிரியா

புதிய நாடாளுமன்றம் இந்தியர்களின் பெருமை: மோடி வெளியிட்ட வீடியோ!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை கூடாது: செந்தில் பாலாஜி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment