அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க முடியாது: மனோ தங்கராஜ்

அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (நவம்பர் 25) தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “அண்ணாமலை உண்மைக்கு புறம்பான தகவல்கள் சொல்கிறார். வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் பேசுகின்றனர்” என்று விளக்கமளித்திருந்தார்,

வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவதான குற்றச்சாட்டை மனோ தங்கராஜ் 48 மணி நேரத்திற்குள் நிரூபிக்கவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (நவம்பர் 24) பதிவிட்டிருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைகூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம், மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை.

ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல. பெரியாரின் பேரன்கள், கலைஞரின் உடன்பிறப்புகள், தளபதியின் தம்பிகள், தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *