சட்டசபையில் இன்று (ஜூன் 22) பால்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.
அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,
“பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 1 கோடி செலவில் பசுந்தீவனம் புல் கரணைகள் வழங்கப்படும்.
அவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை மற்றும் இதர நிதியுதவிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, விபத்தினால் இறப்பு – ரூ.4 லட்சம், கல்வி உதவித்தொகை – ரூ.50 ஆயிரம், திருமண உதவித்தொகை – ரூ.60 ஆயிரம், ஈமச்சடங்கு – ரூ.25 ஆயிரம் , ஓர் உறுப்பு இழந்தவர்களுக்கு – ரூ.1 லட்சம், இரண்டு உறுப்பு இழந்தவர்களுக்கு – ரூ.2.25 லட்சம் வழங்கப்படும்.
கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து டானிக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
திருவண்ணாமலை, தருமபுரி, கடலூரில் ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் பால் ஆய்வுக்கூடங்கள் நிறுவப்படும்.
பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ரூ.95 லட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் பர்த்டே நிகழ்ச்சி… தீக்காயமடைந்த சிறுவன்… நடந்தது என்ன?
மாநகராட்சி, நகராட்சி சாலைகளை சீரமைக்க ரூ.987 கோடி: கே.என்.நேரு