மோடி இந்தியாவில் இதைச் செய்திருந்தால்.. மனோ தங்கராஜ் காட்டம்!

Published On:

| By christopher

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளார். அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத்யீ ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில்,பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இதை இந்தியாவில் செய்தால் நம் தேசத்தின் மக்கள் எவ்வளவு ஒற்றுமையுடன் இருப்பார்கள். இங்கு 80% Vs 20% என பிரித்துப்பேசி வெறுப்பை ஏற்படுத்தி வாக்குகளாக மாற்றும் பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தை இனியும் நம்பபோகிறீர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் குச்சி சிப்ஸ்

T20 WorldCup 2024: இந்திய கேப்டனை உறுதி செய்த ஜெய் ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share