மத்திய அமைச்சர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு: என்ன காரணம்?

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (டிசம்பர் 2) மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசுவை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேருவும், நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜல் ஜீவன் இயக்கத்திற்கு (Jal Jeevan Mission) ஒதுக்கீடு செய்த நிதியில் கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, இந்த நிதி ஆண்டிற்கு வழங்க வேண்டிய தொகை மற்றும் இத்திட்டத்தினை 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக விவாதித்தாக கே.என்.நேரு ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமனை தொடர்ந்து ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரையும் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார்.
அப்போது, “100 நிலையான நகரப்புற மேம்பாடு திட்டத்தின்” கீழ் (100 cities programme for sustainable urban development initiatives ) தமிழ்நாடு மாநிலத்திற்கு 15 நகரங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், கனிமொழி, ஆ ராசா, திருச்சி சிவா, டி.எம்.செல்வகணபதி, அருண் நேரு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்களை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts