சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 22) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை நடைபெற்றது. இந்த மானியக்கோரிக்கையின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி,
“கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை மாநகராட்சியிலுள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க 500 பேட்டரி வாகனங்கள், 2500 மெட்டாலிக் காம்பாக்டர் குப்பை சேகரிக்கும் தொட்டிகள், 5 டிரக்குகள் மீது பொருத்தப்பட்ட கிரேன்கள் கொள்முதல் செய்யப்படும்.
ரூ.12.50 கோடியில் சென்னை மாநகராட்சியில் உள்ள 10 நீர்நிலைகள் புனரமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் ரூ.10 கோடியில் 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டுத் திடல்கள் கட்டப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில், 100 புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் : எச்.ராஜா கைது!