ரேஷன் கார்டு உள்ள அனைத்து மகளிருக்கும் மாதம்தோறும் 1000ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் கட்டிடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று (நவம்பர் 13) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த 1000 ரூபாய் கொஞ்சம் பேருக்கு வராமல் இருக்கும். இந்த பணம் வரும் ஜனவரிக்கு மேல் ரேஷன் கார்டுள்ள அத்தனை மகளிருக்கும் வழங்கப்படும்.
இன்னாருக்குதான் வழங்கப்படும் என்று கிடையாது.ரேஷன் கார்டுகள் யார் யாருக்கு இருக்கோ, இப்போது பணம் யாருக்கெல்லாம் வராமல் இருக்கோ அவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவோம். இனி யாருக்கும் பணம் வரவில்லை என்ற பிரச்சினை இருக்காது” என்று கூறினார்.
2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சியமைத்த நிலையில், இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விருதுநகர், கோவைக்கு கள ஆய்வுக்காக சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் பெண்கள் பலரும், ‘எங்கள் பக்கத்து வீட்டு அக்காவுக்கு பணம் வருது, எதிர் வீட்டு அம்மாவுக்கு பணம் வருது. ஆனால் எங்களுக்கு வரவில்லை’ என்று முறையிட்டனர்.
இந்தசூழலில் வருவாய்த்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கிண்டி அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து… எடப்பாடி, அன்புமணி கண்டனம்!
கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி எப்படி இருக்கிறார்?