காய்ச்சல் காரணமாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்த மாதிரியான காய்ச்சல் என்ற விவரம் தெரியவரும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரியா
அம்பேத்கர் பிறந்தநாள் விடுமுறை : எம்.பி.ரவிக்குமார் கேள்வி!
கடைசி பந்து… த்ரில் வெற்றி: பெங்களூருவை கலங்கடித்த லக்னோ!