டிஜிட்டல் திண்ணை: கண்ணெதிரே அமைச்சருக்கு அவமரியாதை… வெகுண்டு எழுந்த உதயநிதி

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழகத் துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விசிட் அடித்த போட்டோக்கள் வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை  பார்த்துக் கொண்டே  டெல்டா வட்டாரத்தில் சில விசாரணைகளை  நடத்தி முடித்த கையோடு வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“இந்த வாரத் தொடக்கத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வுக்காக  கோவை  புறப்பட்ட நிலையில்,  துணை முதலமைச்சர் உதயநிதி  விழுப்புரத்தில்  அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முடித்துக் கொண்டு திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு பயணப்பட்டார்.

12 பேர், மேடை மற்றும் திருமணம் படமாக இருக்கக்கூடும்

நவம்பர் 6ஆம் தேதி புதன்கிழமை  திருச்சியில்  சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசனின் பேத்தியும்  திமுக சட்டமன்ற உறுப்பினரான கதிரவனின்  மகள்  நீ வாணி நகுலன்  தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.   அதன் பிறகு  திருச்சி மாவட்டத்திற்கு சென்று  அன்று இரவே தஞ்சைக்கு பயணப்பட்டார் உதயநிதி.

தஞ்சையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பாரத சாரணர் இயக்க நிகழ்வும், திமுகவின் மூத்த முன்னோடி கல்லணை காத்தான் இல்லத் திருமண நிகழ்வு,  தஞ்சை எம்பி முரசொலி அலுவலகம் திறப்பு விழா, அண்ணா-கலைஞர் சிலை திறப்பு விழா என தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் துணை முதல்வர்.

இந்த நிகழ்ச்சிகளின் போது தஞ்சை மாவட்ட அமைச்சரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி. செழியன் மாவட்டத்திலே இருக்கும் கட்சி நிர்வாகிகளால் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதை உணர்ந்திருக்கிறார் உதயநிதி.

2 பேர், கூட்டம் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

பொதுவாகவே தனது ஒவ்வொரு பயணத்தின்போதும்… வரவேற்பு முதல் வழியனுப்புதல் வரை அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள்,  அணுகுமுறைகள் ஆகியவற்றை கூர்ந்து கவனிப்பது உதயநிதியின் சிறப்பு இயல்பு.

இப்படித்தான் அக்டோபர் 20 ஆம் தேதி சேலத்தில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சேலம் மாவட்ட இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வீரபாண்டி பிரபு, ‘நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் செய்யும்போதும்  இளைஞரணி மாவட்ட அமைப்பாளரை உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி, ‘நான் இந்த மாவட்டத்துக்கு வரும்போது மற்ற நிர்வாகிகள் அமைச்சர்களை எல்லாம் முந்திக்கிட்டு முதல் வரவேற்பு கொடுத்தவர் பிரபுதான்… அவர் கவனிச்சாரானு தெரியலை, இதை நான் கவனிச்சேன், உங்களை போலவே எல்லா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களுக்கும் தைரியம் இருந்தால் மகிழ்ச்சிதான்’ என்று பேசினார். அந்த அளவுக்கு தான் ஒரு மாவட்டத்துக்குள் நுழைவதில் இருந்து புறப்படுவது வரை கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கவனிப்பார் உதயநிதி,

அதேபோலத்தான் தஞ்சை  சுற்றுப் பயணத்தில் அமைச்சர்  கோவி செழியனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததையும், மாவட்ட அமைச்சரான அவர் சில நிகழ்ச்சிகளில்  போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கே போராட வேண்டியிருந்ததையும் கண்ணெதிரே கண்டார் உதயநிதி,

இதுகுறித்து தஞ்சை மாவட்ட நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசியவர், ‘கோவி செழியன் நமது முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர். அவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டியது நிர்வாகிகள் கடமை. ஒருவேளை அவர் மாவட்டச் செயலாளராக ஆனால்தான் அவருக்கு மரியாதை கொடுப்பீங்களா?’ என்று சுருக்கென கேட்டிருக்கிறார் என்கிறார்கள் டெல்டா வட்டார திமுக நிர்வாகிகள்.

துணைமுதல்வர் உதயநிதி டெல்டா சுற்றுப்பயணம் முடிந்த பின்னாலும் டெல்டா முதல் சென்னை வரை அரசியல் வட்டாரத்தில் இதுதான் பேச்சு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

 

விருதுநகரில் ரோடுஷோ நடத்திய ஸ்டாலின்

ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *