“தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது” – எ.வ.வேலு

Published On:

| By Selvam

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று (அக்டோபர் 11) காலை 10 மணிக்கு துவங்கியது. கேள்வி நேரத்தின் போது, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, “புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை, டிவிஎஸ் கார்னர் வழியாக செல்லும் சாலை நகரின் மைய பகுதியில் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதனால் மேற்கண்ட சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகிறது. அதில் சுங்கச்சாவடி அமைப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினர் சொல்கிற சாலையை ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அத்திக்கடவு – அவினாசி திட்டம் எப்போது துவக்கம்? – துரைமுருகன் பதில்!

சென்னையில் 21 சிறு கால்வாய்களைப் புனரமைக்கும் மாநகராட்சி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share