minister ev velu says sipcot protest

சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: அமைச்சர் எ.வ.வேலு

அரசியல்

அரசு எந்தவித பணியும் செய்து விடக்கூடாது என்பதற்காக சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (நவம்பர் 17) தெரிவித்துள்ளார். minister ev velu says sipcot protest

திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட போது ஒரு தொழிற்சாலை கூட கிடையாது.

ராணிப்பேட்டையில் சிப்காட், ஆம்பூரில் தோல் தொழிற்சாலை உள்ளது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்சாலைக்கு மூன்று கட்டமாக நிலம் எடுக்கும் பணி நடைபெற்றது.

முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது 13 தொழிற்சாலைகள் வந்தது. அதனால் செய்யாறு, வந்தவாசி, ஆரணி தொகுதியை சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.

இரண்டாவது கட்டமாக 1,860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முயற்சியில் 55 தொழிற்சாலைகள் அமைய உள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மூன்றாவது கட்டமாக 1,600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட 9 கிராமங்களில் அரசின் சார்பில் விளக்க கூட்டங்கள், கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றது.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அரசு சார்பில் இரண்டரை மடங்கு தொகை கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

அதேநேரத்தில் தொழிற்சாலைகள் வந்தால் படித்த பட்டதாரிகளுக்கு வேலை உருவாக்க முடியும். அதனடிப்படையில் தான் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

சில பேர் ஊரில் இல்லாத ஆட்களை வரவழைத்து 125 நாட்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கிருஷ்ணகிரியில் இருந்து அருள் என்ற நபர் வந்து போராட்டத்தை தூண்டுகிறார்.

திட்டமிட்டு அரசு எந்த வித பணியும் செய்யக்கூடாது, இளைஞர்கள் வேலை செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் கிடையாது.

சிலரது தூண்டுதலால் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது செய்யாறில் சிப்காட் அமைக்க நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டார். அதிமுக செய்யாததை திமுக செய்வதால் அவர் ஆத்திரப்படுகிறார்” என்று எ.வ.வேலு தெரிவித்தார். minister ev velu says sipcot protest

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி

விவசாயிகள் மீது குண்டாஸ்: பாஜக ஆர்ப்பாட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *