துரைமுருகனுக்கு என்னாச்சு? ஹெல்த் ரிப்போர்ட்!

Published On:

| By Aara

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இன்று பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகனுக்கு என்ன ஆச்சு என்ற விசாரிப்புகள் திமுகவுக்கு உள்ளேயும் திமுக தாண்டியும் அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் உலவுகின்றன.

அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு என விசாரித்தோம். minister Duraimurugan Health report

“கடந்த பிப்ரவரி 5, 6 தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நெல்லை சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார் துரைமுருகன்.

அதன்பிறகு சென்னை திரும்பியவர் உடனடியாக வேலூர் சென்று அணைக்கட்டு பகுதியில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.  அந்த கூட்டத்தில் அமர்ந்து கொண்டே தான் பேசினார் துரைமுருகன். அன்றே வேலூர் காட்பாடியில் முக்கியமான திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் மணமக்களை வாழ்த்தினார்.

வேலூரில் இருக்கும்போதே துரைமுருகனுக்கு சளி, இருமல் தொல்லை சற்று அதிகமாக இருந்தது.

சிறு பிரச்சனை என்றால் கூட உடனடியாக மருத்துவரை அணுகிவிடும் வழக்கம் கொண்டவர் துரைமுருகன்.  அந்த வகையில் தனது மருத்துவரிடம் ஆலோசித்து சில மருந்துகளை எடுத்துக்கொண்டார்.

ஆனாலும் இருமல் சளி குறையவில்லை. பிப்ரவரி 10 ஆம் தேதி காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக தலைமைச் செயலகம் வந்தார் துரைமுருகன். அப்போது மாஸ்க் அணிந்துதான் வந்தார். minister Duraimurugan Health report

‘,என்னண்ணே மாஸ்க் போட்டுருக்கீங்க?’ என முதலமைச்சர் ஸ்டாலின் விசாரிக்க… ‘கபம் சளி தொல்லை அதிகமா இருக்கு… ‘என்று கூறியுள்ளார் துரைமுருகன்.  அன்று மாலை நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திலும் மாஸ்க் அணிந்துதான் பங்கேற்றார் துரைமுருகன்.

அதன் பிறகு கடந்த சில தினங்களாக எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில் பிப்ரவரி 13ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் மாற்று அறிவிப்பு வெளியானது.  அதன் எதிரொலியாக பிப்ரவரி 15ஆம் தேதி அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னை அறிவாலயத்துக்கு வந்தனர். விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் லட்சுமணனையும் மீண்டும் அறிவாலயத்துக்கு அழைத்திருந்தார் ஸ்டாலின்.  

அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகனையும் அறிவாலயத்துக்கு அழைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். minister Duraimurugan Health report

‘உடம்பு முடியல… இருமல் தொல்லை இருக்கு’ என அறிவாலயத்துக்கு தன்னால் வர முடியாத நிலைமையை சொல்லி இருக்கிறார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

இதையடுத்து அறிவாலயம் செல்வதற்கு முன்…  உடனடியாக அன்று மாலை துரைமுருகன் இல்லத்துக்கே சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

’சென்னையில் பனியின் தாக்கம் இன்னமும் குறையலை.  கவனமாக இருங்கண்ணே…’ என  சொல்லிவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த நிலையில் தான் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார் அமைச்சர் துரைமுருகன். தகவல் அறிந்து இன்று மருத்துவமனைக்கும் சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அங்கே சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  நெஞ்சு சளி சற்று அதிகமாக இருப்பதால் மருத்துவர்கள் துரைமுருகனுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share