திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நேற்று மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் எழுதிய கலைஞர் கருணாநிதி வரலாறு மற்றும் பொருளாதார நிபுணரும், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.
மேடையில் பேசும் போது அமைச்சர் துரைமுருகன் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக நேற்று நள்ளிரவு அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார். தற்போது அமைச்சர் துரைமுருகன் நலமுடன் இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
செல்வம்