திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சளி, லேசான காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஒரு வாரமாகவே அமைச்சர் துரைமுருகனுக்கு சளித்தொந்தரவு இருந்துள்ளது. நேற்று (டிசம்பர் 18) இரவு சளித்தொந்தரவு அதிகமாகவே, துரைமுருகன் வீட்டிலிருந்து அப்பல்லோ மருத்துவரை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஆண்டிபயாடிக் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
இதனால் அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லைக்கு ஆண்டிபயாடிக் எடுத்து விட்டு இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று அமைச்சர் துரைமுருகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மழை, வெள்ளம்: மூன்றாவது நாளாக ரயில் நிலையத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள்!
ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும் அத்திப்பட்டு அனல்மின் நிலையம்!