அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
இந்தசூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் “அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 80 சதவிகித விசாரணை நிறைவடைந்ததால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ளக்கொள்ள முடியாது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பிலும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும் யாரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
சந்திரயான் – 3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது எப்படி?
திமுக அமைச்சர்கள் வழக்கின் தீர்ப்பு என்னை தூங்கவிடவில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி