சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 22) கால்நடை வளர்ப்பு, மீனவர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.
அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட கால்நடை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
“கால்நடை பராமரிப்பு
ரூ.1.10 கோடியில் அதிக மகசூல் தரும் தானிய வகை மற்றும் பயறு வகை தீவன விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த ஆதரவற்ற 38, 700 பெண்களுக்கு ரூ.6.45 கோடியில் 50% மானியத்தில் நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.
தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ.1.55 கோடியில் தீவன சோளம் மற்றும் தட்டைப்பயறு விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ரூ.10 கோடியில் நடுவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணைகள் மேம்படுத்தப்படும்.
ரூ.5 கோடியில் பசுந்தீவனப் பயிர்கள் பயிரிடப்பட்டு தீவன உற்பத்தி பெருக்கப்பட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
தீவன விரயத்தைக் குறைப்பதற்காக, மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் வழங்கப்படும்.
5 லட்சம் செல்லப் பிராணிகளுக்கு 50% மானியத்தில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படும்.
ரூ.25 கோடியில் கால்நடை மருத்துவ கல்லூரி விடுதி வளாகத்தில் மாணவியர் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.
மீனவர் நலன்
ரூ.12 கோடியில், சென்னை மாவட்டம், பாரதியார் நகரில் புதிய மீன் இறங்குதளமும், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
ரூ.25 கோடியில், இராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடி மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு & வலைபின்னும் கூடம் அமைக்கப்படும்.
ரூ.30 கோடியில், கடலூர் மாவட்டம், சாமியார் பேட்டை மீன் இறங்குதளத்தில், தூண்டில் வளைவுடன் கூடுதல் வசதிகள் & முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 11 மீனவ கிராமங்களில் ரூ.8.50 கோடியில் வடிகால் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.39.88 லட்சத்தில் கடலோர கிராமங்களில் வசிக்கும் 222 மீனவ மகளிர் மாற்று வாழ்வாதார தொழிலாக கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்ள திட்டம்.
ரூ.38 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் விவேகானந்தர் நகரில் மீன் இறங்குதளம் அமைத்தல் & பெரியதாழை மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம், ஏரிப்புறக்கரை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தும் & கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் தடுப்பு சுவர் அமைத்து மீன் இறங்கு தளத்தில் கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
ரூ.15 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் கரையோர உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.37 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் மீனவ கிராமத்தில் படகு அணையும் தளம் அமைத்தல்.
ரூ.14.20 கோடியில் மீன்களைத் தரமாகவும், சுகாதாரமாகவும் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்கப்படும்.
ரூ.5 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 200 செயற்கைகோள் தொலைபேசிகள் வாங்கிட 40% மானியம் வழங்கப்படும்.
ரூ.52 கோடியில், கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு & பள்ளம்துறை மீன் இறங்குதளங்களில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.32 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு நண்டலார் ஆற்றின் முக துவாரத்தினை தூர்வாரி தடுப்பு சுவர் அமைத்தல்
ரூ.19 கோடியில் செங்கல்பட்டு மாவட்டம், கானத்தூர் ரெட்டி குப்பத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
ரூ.5 கோடியில் நாகப்பட்டினம் மாவட்டம், செருதலைக்காடு மீனவ கிராமத்திலுள்ள மீன்பிடி இறங்கு தளம் மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகை உயர்வு: மனோ தங்கராஜ்
விஜய் பர்த்டே நிகழ்ச்சி… தீக்காயமடைந்த சிறுவன்… நடந்தது என்ன?