போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஊதிய முரண்பாட்டைக் களைதல், பதவி உயர்வைத் தடுக்கும் விதமாக அமைந்திருக்கும் அரசாணை 243 ரத்து செய்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற 31 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று (செப்டம்பர் 10) டிட்டோ ஜாக் அமைப்பில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வகுப்புகள் தடைபட்டுள்ளதால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்திந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12ஐ நிறைவேற்றி தருவதாக ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். எனினும் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்காமல் காதை மூடிக்கொண்டு திமுக அரசு செல்லாது. அவர்களை நேரில் அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
வேகப்பந்து வீச்சாளர் என்பதை மறந்த மனோஜ் பிரபாகர்… அதிரடி மன்னன் கையில் இலங்கை அணி!
போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு : மாணவர்கள் தவிப்பு!