“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” – குதிரை ஓட்டிய அன்பில் மகேஷ்

Published On:

| By Kalai

minister Anbil Mahesh rode a horse

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குதிரை வண்டியில் சென்று பசுமைப் பள்ளித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பசுமைப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் முறையாக பசுமை பள்ளி திட்டத்தினை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் பாசனம் முறையிலான காய்கறி தோட்டம் அமைப்பதை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் சிறுவகை மீன்கள் வளர்ப்பதற்கான பண்ணை குட்டையை திறந்து வைத்து மீன் குஞ்சுகளை நீரில் விட்ட அன்பில், பசுமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.பின்னர்பள்ளி மாணவர்களுக்கு விவசாய வேளாண் கருவிகளை வழங்கினார்.

தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஏற்பாட்டில் குதிரை வண்டியில் ஏறி உற்சாகமாக குதிரை வண்டியினை ஓட்டி சென்றார்.

பின்னர் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கொரடாச்சேரி கடை தெரு வழியாக சென்று கொரடாச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவதாக பசுமை பள்ளி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முயற்சியின் பேரில் பள்ளி தோட்டம் அமைப்பதற்கான விதை தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய விவசாய பிரிவு மாணவர்கள் பயன் பெரும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவில் தமிழகத்தில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 பள்ளிகளில் இந்த திட்டத்தை கொண்டு வர போகிறோம்.

மேலும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமில்லாது உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் திட்டமாக அமையும் என நம்புகிறேன் என கூறினார்.

கலை.ரா

முகமது சிராஜின் செயல்: நெகிழ்ந்த தாய்!

”நீதிக்கு நாம் செய்யும் பிழை!” – காவலர்களிடம் கண்டிப்பு காட்டிய முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share