மாநில பாடத்திட்டம் சிறப்பாக இல்லையா?: ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

சிபிஎஸ்இ மாநில பாடத்திட்டத்தை காட்டிலும் மாநில பாடத்திட்டம் சிறப்பாக இருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சியில் நேற்று (செப்டம்பர் 1) கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,“தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது.
பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன்.

அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செப்டம்பர் 2) பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “இதுவரை நான் 180 பள்ளிகள், சிஇஓ அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறேன். இதில் அதிகமாக  நான் நூலகங்களுக்கு சென்றுதான் ஆய்வு செய்திருக்கிறேன்.

அங்கு அதிகப்படியான மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் புத்தகங்கள் ஏதேனும் தேவைப்படுகிறதா என்று கேட்ட போது, மாநில படத்திட்டத்தை கொண்ட 6-12ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் தேவைப்படுகிறது என்று கூறுவார்கள்.

இந்த புத்தகங்களில் இருந்துதான் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்கிறார்கள். யுபிஎஸ்சி மாணவர்களும் இதையேதான் கேட்கின்றனர்.

அப்படி பார்த்தால் ஆளுநரின் கருத்து இங்கு முரண்படுகிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட பல மடங்கு முன்னிலையில் மாநில பாடத்திட்டம் இருக்கிறது.

வேண்டுமானால் ஆளுநரை அழைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு நூலகத்துக்கு செல்கிறேன். அவர் மாணவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

தோனி எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தார் – யுவராஜ் சிங் தந்தை குற்றச்சாட்டு!

Paralympics 2024: ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்… ஒரே நாளில் 7 பதக்கங்களுக்கு குறி!

“வலியை பேசும் வாழை” : சான் பிரான்சிஸ்கோவில் படம் பார்த்த ஸ்டாலின்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts