பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக ஏராளமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்புளூயன்சா மற்றும் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பரிசோதனை முடிவில் அமைச்சருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தினசரி 100பேர் அளவிற்கு ஹச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
6471 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் ,15,900 பள்ளிகளில் வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
15 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று வரை மொத்தம் 421 பேர் சிகிச்சை பெறுகின்றனர். டெங்குவை பொறுத்தவரை மொத்தம் 4068 பேர் பாதிக்கப்பட்டவர்கள்.
தற்பொழுது 344 பேர் டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெறுகின்றனர். 1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை அவர் வீடு திரும்புவார். அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
கலை.ரா
நீதிமன்றத்துக்குச் சென்ற திமுகவின் மா.செ. தேர்தல்!
நிதி நெருக்கடி: இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்படுகிறதா!