பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நலமாக உள்ளார் என்று பெங்களூரு நாராயணா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (ஆகஸ்ட் 13) தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்படவே கிருஷ்ணகிரியில் உள்ள அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு நாராயணா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து பெங்களூரு நாராயணா மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“அன்பில் மகேஷூக்கு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். திரவ ஆகாரங்களும், வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது உடல்நிலை திடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்பில் மகேஷை சந்திக்க அவரது மனைவி ஜனனி இன்று பெங்களூரு செல்கிறார். இன்று பிற்பகல் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை வருவதாக தகவல்கள் வருகின்றன.
செல்வம்
ஆசிய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஸ்வீட் சாப்பிட நினைப்பவரா நீங்கள்?