லேசான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஆகஸ்ட் 13) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (ஆகஸ்ட் 12) தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்படவே கிருஷ்ணகிரியில் உள்ள அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு நாராயணா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து பெங்களூரு நாராயணா மருத்துவனை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அன்பில் மகேஷூக்கு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். திரவ ஆகாரங்களும், வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது உடல்நிலை திடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று மதியம் 1 மணியளவில் பெங்களூரு நாராயணா மருத்துவமனையிலிருந்து அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் ஆனார். அவர் சாலை மார்க்கமாக பெங்களூரிலிருந்து சென்னை வருகிறார்.
செல்வம்
“ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது கொடூரம்” – எடப்பாடி
இரண்டு நிமிட சம்பவம்: நூடுல்ஸ் கதை உருவானது எப்படி?