பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 1) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் அன்பில் மகேஷ், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்தார். பின்னர், அண்ணாவின் நினைவு இல்லம் சென்று புகைப்பட தொகுப்புகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசனுடன் பார்வையிட்டார்.
இந்தநிலையில், அமைச்சர் அன்பில் மகேஷுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நாளை காலை அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!
சென்னை டூ குமரி : நிதின் கட்கரியிடம் கோரிக்கைகள் வைத்த எ.வ.வேலு