அமைச்சர் அன்பில் மகேஷ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஆகஸ்ட் 12) காலை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணையை வழங்கினார்.
இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும் போது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதற்கட்ட பரிசோதனையில் அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள இருதாலையா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
இந்த விஷயம் அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்.
திடீர் நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுகவினரிடத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
நீ எஸ்.சி தானே… அம்மாவ ஏசினாங்க… அண்ணன வெட்டினாங்க’ -நடந்ததைச் சொல்லும் தங்கை சந்திராசெல்வி
“நீட் மசோதாவிற்கு எந்த காலத்திலும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்” – அடுத்த சர்ச்சையில் ஆளுநர் ரவி