இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறினார்.
சென்னை, ராஜ்பவனில் இன்று (டிசம்பர் 14) அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,
“அத்தனை பேரின் வாழ்த்துகளுக்கு நன்றி. இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. சட்டமன்ற உறுப்பினர் ஆன போதும் விமர்சனம் வந்தது.
இப்போதும் கண்டிப்பாக விமர்சனங்கள் வரும். அதற்கெல்லாம் என்னுடைய செயல் மூலம் பதில் சொல்வேன்.
தலைவரின் ஆணையை ஏற்று அனைவரின் ஒத்துழைப்போடு என்னுடைய பொறுப்பைச் சரியாகச் செய்வேன்.
இப்போதுதான் அலுவலகத்துக்குச் செல்லப் போகிறேன். முதல் கையெழுத்துப் போடப்போடுகிறேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதற்கான பணிகள் முடுக்கிவிடப்படும்.
இந்த பதவி என்பது ஒரு கூடுதல் பொறுப்பு. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் செயல்படுவேன்” என கூறினார்.
பிரியா