Mike Symbol Seaman Request Rejected

மைக் சின்னம் : சீமான் கோரிக்கை நிராகரிப்பு!

அரசியல்

மைக் சின்னத்துக்கு பதில் வேறு சின்னத்தை ஒதுக்க கோரிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியும், தேர்தல் ஆணையமும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது.

இந்நிலையில் ‘படகு’ அல்லது ‘பாய்மர படகு’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தது நாம் தமிழர் கட்சி.

இந்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், மைக் சின்னத்தை இன்று உறுதி செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மயிலாடுதுறை வேட்பாளர் யார்?: ஒருவழியாக அறிவித்த காங்கிரஸ்!

“நான் பல்ல காட்டுறேன்… நீங்க என்னத்த காட்டுறீங்க” : உதயநிதிக்கு எடப்பாடி கேள்வி!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments are closed.