புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரவி வருகின்றது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புன்றனர்.
அவர்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. போலியான வீடியோக்கள் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தமிழக அரசு அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
இந்தநிலையில், தமிழக அரசை விமர்சித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெறுப்பு பிரச்சாரத்தின் காரணமாக தான் தமிழகத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல் 505(1)(b), வன்முறையை தூண்டுதல் (153), மத ரீதியான வன்முறையை ஏற்படுத்துதல் 153A(1)(a), இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் IPC 505(1)(c) IPC உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செல்வம்
கள ஆய்வில் முதல்வர்: இன்று மதுரை பயணம்!
ரூ.100 கோடி வசூல் செய்த ‘வாத்தி’: நன்றி சொன்ன தனுஷ்