முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவை தொடங்கியவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று(டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திலும், ஆங்காங்கே உள்ள எம்ஜிஆர் சிலைகள் மற்றும் உருவப்படத்திற்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், பொன்னையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இவர்கள் அஞ்சலி செலுத்த தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலை.ரா
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்: சினிமா துறைக்கு நல்லதா கெட்டதா?
சபரிமலை தரிசனம்: 50 அடி பள்ளத்தில் விழுந்து 8 பக்தர்கள் பலி