”பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை” என மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் நிர்மல் சவுத்ரியின் பதவியேற்பு விழா நேற்று ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை, அப்பதவியில் இருந்து ஒருநாள் விலக வேண்டுமென்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.
இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.
நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளைஞர்களின் இயக்கமும் தொடங்கும்” என்றார்.
பிரதமர் மோடியை, மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
முதல்வரை விமர்சித்த வழக்கு: கிஷோர் கே.சாமி கைது!
அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
வெறும் வாய்க்கு பிடி அவல்..அவ்ளோ தான்..வேறென்ன இந்த நபரால் கிழிச்சிட முடியும்…சுய பக்குவமில்லாத வலிமை அற்ற வறட்டு வயிற்றெரிச்சல் கூப்பாடு..தெண்ட பசங்கள்..