மேகதாது விவகாரம்: தமிழக அரசு இன்று பதில் மனுத் தாக்கல்!
இறுதித் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்க தடை வேண்டும் என தமிழக அரசு இன்று மீண்டும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு இன்று (நவம்பர் 22) மீண்டும் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதில், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்க தடை வேண்டும்’ என தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
ரோஜ்கார் மேளா: சென்னை நிகழ்வில் இந்தியில் பேனர்!
திருச்சி சூர்யா மீது ஆபாச புகார்: கண்டித்த காயத்ரியை நீக்கிய அண்ணாமலை