பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 28 ) சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”கடந்த முறை சென்னை வந்த மோடி தன்னை வந்து சந்திக்கும் படி சொல்லியிருந்தார்.
இந்த சந்திப்பின் போது எந்தவிதமான அரசியலும் பேசப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நலத்தை பற்றி விசாரித்தார்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு எனது இரங்கலை அவரிடம் பதிவு செய்தேன்.
முதலமைச்சர் கோப்பையை 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நடத்த உள்ளதாகவும் , 15 விதமான விளையாட்டுகளுக்கு இதன்மூலம் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்தேன். பிரதமர் அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வில் விலக்கு அழிப்பது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கினேன். அவர் தனது கருத்தை தெரிவித்தார். அதன்பின் நீட் தேர்வின் பிரச்சனைகளை அவரிடம் விளக்கினேன்.
கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை அடுத்த முறை தமிழ்நாட்டிற்கு அளிக்கும் படி கோரிக்கை வைத்தேன்” என்றார். மேலும், இந்த சந்திப்பு திருப்தியாக அமைந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!