திருமாவளவனைச் சந்தித்த துரை வைகோ

Published On:

| By Kavi

durai vaiko meet thirumavalavan

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை துரை வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் உடல்வலி, காய்ச்சல் காரணமாகச் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதனால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

மருத்துவமனையிலிரு2க்கும் திருமாவளவனைத் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.

Image

இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று (செப்டம்பர் 28) மருத்துவமனைக்கு நேரில் சென்று திருமாவளவனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது சமூக வளைதல பக்கத்தில் பகிர்ந்துள்ள துரை வைகோ,

“விசிக தலைவர் திருமாவளவன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன்.

அயராத அரசியல் பயணத்திற்கு இடையே தங்களின் உடல் நலத்தையும் பேண வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

ஏற்கனவே தங்களிடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடமும் பலமுறை இது பற்றிக் கூறியுள்ளேன் என்றதும், ஆமாம்.. தம்பி ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார் என்று உடன் இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டி ஆமோதித்தார்.

தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இயன்றவரைக் குறைத்துக் கொள்ள வேண்டும், தவிர்க்க இயலாத நிலையில் சந்திக்க வரும் பார்வையாளர்கள் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மருத்துவரிடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடமும் கேட்டுக்கொண்டேன்.

ஏனென்றால் இதுபோன்ற சூழலில் பார்வையாளர்கள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு மேலும் பலவீனப்படுத்தி விடும்.

விரைவில் பூரண நலமடைந்து அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும். அவ்வப்போது சீரான ஓய்வும், உறக்கமும் தேவை என்று கூறிவிட்டு விடைபெற்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரியா

ஆக்சன் அவதாரில் ரன்பீர் கபூர்! எகிறும் எதிர்பார்ப்பு!

பல்வீர் சிங் மீதான அடுத்தக்கட்ட விசாரணை : அரசுக்கு சிபிசிஐடி கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel