நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி: மதிமுக உறுதி!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் இன்று (பிப்ரவரி 3) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக தலைவர்கள் இன்று தொகுதி பங்கீடு  குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மதிமுக  சார்பில் அவைத் தலைவர் அர்ஜூன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ், “பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. நாங்கள் இரண்டு லோக் சபா சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டிருக்கிறோம்.

இந்த முறை எங்களுடைய கட்சி சின்னத்தில் தான் கண்டிப்பாக போட்டியிடுவோம். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் முடித்து தமிழகம் திரும்பியதும் இறுதி முடிவு எட்டப்படும்”  என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நடந்தது என்ன?

விளையாட்டு அரங்குகளை மேம்படுத்த ரூ.25 கோடி: எந்தெந்த இடங்களில்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel