முதல்வர் கான்வாயில் தொங்கிய மேயர்!

அரசியல்

சென்னை மேயர் பிரியா முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 4, 2022 அன்று சென்னை மேயராக பொறுப்பேற்றார் பிரியா. மாண்புமிகு மேயர் என்று அழைக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்ற சில நாட்களிலிருந்தே பிரியாவைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. எனினும் கடந்த மாதத்தில் பெய்த பருவ மழையின் போது இரவிலும் ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட செயல்களால் சென்னை மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கினார்.

தற்போது முதல்வர் கான்வாயில் பாதுகாப்பு அதிகாரி போல், பிரியா தொங்கியபடி பயணம் செய்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல்வர் மேயர் பிரியாவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல்வர் ஸ்டாலின் காசிமேடி மீன்பிடி பகுதிக்கு ஆய்வுக்குச் சென்றார். வழக்கமாக முதல்வர் வாகனத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தொங்கியபடி செல்வார்கள்.

ஆனால் இன்று பிரியா தொங்கியபடி பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல ககன்தீப் பேடி ஐஏஎஸ் அதிகாரியும் தொங்கியபடி பயணம் செய்திருக்கிறார்.


இந்தவீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா

ராணுவத்தில் எவ்வளவு காலியிடம்?: மத்திய அரசு பதில்!

“முட்டாளே போ”: கூலான மெஸ்ஸி சீறியது ஏன்?

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *