நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று (ஜனவரி 15) அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “கூட்டணியால் அதிக இழப்புகளை சந்தித்துவிட்டோம். பெரும்பாலான கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படலாம்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுடன், கடந்த 2007 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியமைத்தோம், அதனால் தான் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். சாதி, மதவெறி கொண்டவர்களுடன் இடைவெளியை கடைபிடிப்போம்,
கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஆகாஷ் ஆனந்தை எனது அரசியல் வாரிசாக அறிவித்தேன். அதைத் தொடர்ந்து நான் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறலாம் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று மாயாவதி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லால் சலாம் படத்தின் ‘ஏ புள்ள’ பாடல் ரிலீஸ்!
“கங்குவா” பொங்கல் ட்ரீட்: படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!