பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசியல்

தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப்ரல் 7) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான காணொளி ஆலோசனை கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

பின்னர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாடு முழுவதும் ஒரே நாளில் 6050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு குறித்து நாடு முழுவதும் மாதிரி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளது’’ என தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களில் 2% ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேலும், சமூக பரவல் இப்போது இல்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், மருத்துவமனைகளில் போதிய அளவில் ஆக்சிஜன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விக்கு அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என பதிலளித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஐபிஎல் “சியர் லீடர்ஸ்”:ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

விடுதலை ஷூட்டிங் : சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் சேதுபதி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *