அதிமுகவிற்கு இப்போது பிடித்திருக்கும் நோய் எடப்பாடி பழனிசாமி, அதற்கு மருந்து ஓ. பன்னீர்செல்வம் என்று மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “அதிமுக யாருடைய சொத்து? தொண்டர்களின் சொத்து. தொண்டர்கள் உள்ளவரை கவலையில்லை. ஓபிஎஸ் உத்தரவிட்டால் எடப்பாடி அணி அதிமுகவில் இருக்காது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எடப்பாடியை நீக்கிவிடலாம்.
ஒத்துவரவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியை ஒழித்துவிட்டு ஒன்றிணைவோம். அவர் இடையில் வந்த டைரக்டர் அவ்வளவுதான்.
எடப்பாடியிடம் உள்ளது டெண்டர் படை, ஓபிஎஸ் உடன் உள்ளது தொண்டர் படை. அதிமுகவை இக்கட்டான சூழலுக்கு தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
ஒற்றைத் தலைமை வேண்டாம், சட்டச் சிக்கல் வரும் என்று அப்போதே சொன்னேன். எனக்கு ஒரு ஆசை, கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைக்க வேண்டும்.
விசாரித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதன் பின் ஓ.பி.எஸ் தான் நிரந்தர முதல்வராக இருப்பார்” என்று மனோஜ் பாண்டியன் பேசினார்.
கலை.ரா
ஈபிஎஸுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?
“தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கிப்பார்”: எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால்!