டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உதவியாளர் இன்று (நவம்பர் 5) அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, கடந்த மாதம் சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் தேதேந்திர சர்மாவை அமலாக்கத் துறையினர் இன்று (நவம்பர் 5) கைது செய்துள்ளனர்.
அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேதேந்திர சர்மா கைது குறித்து மணிஷ் சிசோடியா, “மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை தேதேந்திர சர்மாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பாஜக இருக்கிறது. அக்கட்சி, தேர்தலை பார்த்து பயப்படுகிறது” என குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஜெ.பிரகாஷ்
குஜராத்: ரூ.2 கோடிக்கு ரூ.12 லட்சம் மட்டுமே செலவு செய்த நிறுவனம்!
சட்டத்தின் முட்டுச் சந்தில் அமைச்சர் அனிதா: கைதுக்குத் தயாராகும் அமலாக்கத்துறை!