டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் கொடுக்கப்படும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில், அது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
இன்று (நவம்பர் 19) காலை பாஜக சார்பில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அதில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் பாடி மசாஜ் செய்வது பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதுகெலும்பு பிரச்சனை காரணமாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் மணிஷ் சிசோடியா.
அவருக்கு முதுகு தண்டில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் பிசியோதெரபி சிகிச்சையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி அவருக்கு பிசியோதெரபி மேற்கொள்ளப்பட்டது. சத்தியேந்திர ஜெயின் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலிலும், குரஜராத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக இதுபோன்ற மலிவான அரசியலில் பாஜக இறங்கியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பிரியா
திகார் சிறையா, மசாஜ் பார்லரா?: ஆம் ஆத்மி அமைச்சரின் வீடியோ!
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு? – 6 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!