மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ கஸ்டடி!

அரசியல் இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஜாமின் வழங்கக் கோரி மணீஷ் சிசோடியா தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

அதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது 5 நாட்கள் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மணீஷ் சிசோடியா இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, “கைதுக்கு முன்னதாகவே சிபிஐ விசாரணைக்கு அழைத்த போது முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்ட நிலையில் காவலில் தொடர்ந்து வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை’ என்று சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.

அதே நேரத்தில் விசாரணைக்கு சிசோடியா முழு ஓத்துழைப்பு வழங்கவில்லை என்றும், மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சிபிஐ மற்றும் சிசோடியா இருதரப்பு வாதத்தைக்கேட்ட நீதிமன்றம், சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்கி, ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் அதிகளவில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா

வாச்சாத்தி வழக்கு: நீதிபதி நேரில் விசாரணை!

அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *