சென்னையில் மாண்டஸ் புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்துள்ளது என்றும், நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது.
புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மழையும் வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னையின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகிறார்.

தென் சென்னை பகுதியில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பக்கம், பனையூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தென்சென்னை பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கிருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொள்ள செல்கிறார்.
கலை.ரா
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?
அதிமுகவோடு கூட்டணி இல்லை- திமுகவோடு சமரசம் இல்லை: அண்ணாமலையின் புது ரூட்!