மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தை பாஜக அரசு பாரபட்சமாகப் பார்க்கிறது, நிலுவையில் உள்ள தொகையை வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 29) மத்திய அரசுக்கு எதிராக 2 நாட்கள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
மத்திய கொல்கத்தா பகுதியில் ரெட் ரோட்டில் உள்ள பி.ஆர்.அம்பேத்கரின் சிலைக்கு முன்பாக நடைபெற்று வரும் தர்ணா போராட்டம் நாளை மாலை வரை தொடரும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் உட்பட எந்த நிதியையும் மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கவில்லை.
ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகை, இந்திரா ஆவாஸ் யோஜனா, சாலை மற்றும் வீட்டுவசதித்துறை ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு வர வேண்டிய 7000 கோடி ரூபாயைக் கொடுக்கவில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு மாநில முதல்வரே தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியா
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: முடிவைத் தீர்மானிக்கும் லைகா
“அநியாயமா பில் கொடுக்குறாங்க” : மா.சு.பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!