உங்க கால்ல வந்து விழணுமா?: மோடியை சீண்டிய மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கர்ஜனை பேச்சு தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் பீர்சா முண்டாவின் பிறந்த நாள் விழாவை ஒட்டி மரியாதை செலுத்துவதற்காக ஜார்கராமுக்கு சென்றார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த மாநில அரசுக்குப் பணம் தேவைப்படுவதாகவும் இதற்காகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போதே வலியுறுத்திவிட்டதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.

ஆனாலும், மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என விமர்சித்த மம்தா பானர்ஜி,

நான் உங்கள் கால்களில் விழுந்து கெஞ்ச வேண்டுமா என பொது மேடையில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசை நோக்கிச் சீறியுள்ளார்.

https://twitter.com/AITCofficial/status/1592448149247131648?s=20&t=hU9BFh95v4zurTALnMpOfg

இது ஜனநாயக நாடா இல்லை, ஒரு கட்சிக்கான நாடா எனக் கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிதியைக் கொடுங்கள் என மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் பதவியை விட்டு விலகுங்கள் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதால் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்த வாய்ப்பு உள்ளதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று பேசியிருந்தார்.

மேலும் அவர், அவர்கள் (மத்திய அரசு) நிதியை நிறுத்தினால் நாம் ஜிஎஸ்டி வரியை நிறுத்துவோம் எனக் காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுக்குச் சேர வேண்டிய நிதியை நிறுத்திவைத்துக்கொண்டு எங்களிடம் இருந்து வரியை மட்டும் வசூல் பண்ணலாம் என நினைக்கிறீர்களா என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும் சிலர் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு மேற்கு வங்க மாநில மக்களைப் பட்டினி போட மாநில அரசுக்கு எதிராகச் சதி செய்வதாக சுவேந்து அதிகாரியை மறைமுகமாக விமர்சித்த மம்தா,

மாநிலத்துக்குச் சேர வேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்தாலோ நிறுத்தி வைத்தாலோ பழங்குடியின மக்கள் அம்பு மற்றும் வில்லுடன் சாலைகளில் இறங்கி தர்ணாவில் அமர நேரிடும் என குறிப்பிட்டார்.

அப்தூல் ராபிக்

டிஜிட்டல் திண்ணை: பாஜக கூட்டணி – தொண்டர்களிடம் பல்ஸ் பார்க்கும்  எடப்பாடி

சானியா மிர்சாவை வாழ்த்திய சோயிப் மாலிக்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts