காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி

Published On:

| By Jegadeesh

காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் செல்வாக்குடன் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 10 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் 135 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (மே15) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் செல்வாக்குடன் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

அதே போல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்த மாநிலத்தில் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பிகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி ஆதரிக்கப்பட வேண்டும்.

மேலும் , மாநிலக் கட்சிகள் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் எனவும், நாட்டைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றவும் ஒரு சமமான மைதானம் இருக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆவடி நாசருக்கு பதிலாக இன்னொரு முஸ்லிம் அமைச்சர்: ஜவாஹிருல்லா கோரிக்கை!

“கள்ளச்சாராயம் எனும் தீமையை நெருங்க வேண்டாம்”: ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share