Mamata Banerjee says she will contest alone west bengal

மேற்கு வங்கத்தில் திருணமூல் தனித்து போட்டி: மம்தா அறிவிப்பு!

அரசியல்

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப்போவதாக திருணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இன்று (ஜனவரி 24) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி மேற்கு வங்க முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மத  நல்லிணக்க யாத்திரையை நடத்தினார்.

இந்த பேரணிக்கு பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியபோது, “எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரையே நான் தான் பரிந்துரைத்தேன். ஆனால், நான் இந்தியா கூட்டணி கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது சிபிஐ(எம்) அதைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்கிறேன்.

34 ஆண்டுகளாக நான் யாரை எதிர்த்துப் போராடி வருகிறேனோ அவர்களுடன் என்னால் எப்படி உடன்பாடு செய்துகொள்ள முடியும்? முடியவே முடியாது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப்போவதாக திருணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்தவிதமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்.

அதனால் இந்தியா கூட்டணியில் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி, மேற்குவங்கத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம்.

திருணமூல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ராகுல் காந்தியின் நியாய யாத்திரை மேற்குவங்க மாநிலம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கமலின் ‘Thug Life’ ஷூட்டிங் ஆரம்பம்: வீடியோ வெளியிட்ட படக்குழு!

சி.வி.சண்முகத்திற்கு எதிரான இரண்டு அவதூறு வழக்குகள் ரத்து!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0