முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மம்தா

அரசியல்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (நவம்பர் 2 ) மாலை சந்தித்தார்.

மேற்குவங்க ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் பதவி வகித்து வருகிறார். இல.கணேசனின் அண்ணன் கோபாலன் பிறந்த நாள் விழா நாளைய தினம் (நவம்பர் 3) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் மம்தா.

இந்நிலையில் , முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த மம்தா பானர்ஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து வரவேற்றார்.

Mamata Banerjee met Chief Minister Stalin

இந்த சந்திப்பில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது பற்றி பேசலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது, அரசியல் பேசுவது வழக்கம் தான். நான் அனைத்து மாநில கட்சிகளையும் நம்புகிறேன்.

அவர்கள் தான் 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் பங்கு வகிக்க உள்ளார்கள் என்று மம்தா பானர்ஜி சென்னை புறப்படுவதற்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: நீதிமன்றம் புதிய உத்தரவு!

சிறுவன் கடித்து நாகப்பாம்பு உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *