தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ( நவம்பர் 2 ) கூறியுள்ளார்.
மேற்குவங்க ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் பதவி வகித்து வருகிறார். இல.கணேசனின் அண்ணன் கோபாலன் பிறந்த நாள் விழா நாளை ( நவம்பர் 3) கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில் , சென்னை புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி ”சென்னை பயணத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளேன். அவர் எனது அரசியல் நண்பர் . நான் சென்னை போவதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கவுள்ளேன் என்றார்.
மு.க.ஸ்டாலினுடன் அரசியல் பற்றி கலந்துரையாடல் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்த அவர் “இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது, அரசியல் பேசுவது வழக்கம் தான். நான் அனைத்து மாநில கட்சிகளையும் நம்புகிறேன். அவர்கள் தான் 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் பங்கு வகிக்க உள்ளார்கள்” என்று கூறினார்.
இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் பாஜகவிற்கு எதிரான அணியானது யாரை முன்னிறுத்தி அமைக்கப்படும்? அதில் ஒற்றுமை நிலைக்குமா? பாஜகவை வீழ்த்த சரியான வியூகம் வகுப்பார்களா? காங்கிரஸ் என்னவாகும்? எனப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அரசியல் கோமாளி அண்ணாமலை: அமைச்சர் மனோ தங்கராஜ்
டி20 உலகக்கோப்பை: மழையால் தடைப்பட்ட இந்தியா-வங்கதேசம் போட்டி!